சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தைச் சேர்ந்த குருநாதன் (ரவிவர்மன்) என்ற நபர், ரவிவர்மன் எக்யூப்மென்ட் என்ற நிறுவனம் மூலம், SMAM திட்டத்தின் கீழ் மானிய விலையில் பவர் டில்லர் டிராக்டர் வாங்கித் தருவதாகக் கூறி, கடந்த ஆண்டு 7 விவசாயிகளிடம் ரூ.70,000 முதல் ரூ.1.30 லட்சம் வரை வசூலித்ததாக கூறப்படுகிறது. ஆனால் ஒரு வருடமாகியும் டிராக்டர்கள் வழங்கப்படாமல், வசூலித்த பணமும் திருப்பி தரப்படவில்லை.