தர்மபுரி பட்டு வளர்ச்சி துறை சார்பில், பட்டுக்கூடு ஏல அங்காடி நான்குரோடு அருகே செயல்பட்டு வரு கிறது. இந்த அங்காடிக்கு தர்மபுரி, பென்னாகரம், பாலக்கோடு, மாரண்ட ஹள்ளி பகுதிகளில் இருந்தும், ஈரோடு மாவட்டம் சித்தோடு, சத்தியமங்கலம் மற்றும் கரூர், திருவண்ணா மலை பகுதிகளில் இருந்தும் தினமும் 30க்கும் மேற்பட்ட விவசாயிகள் பட்டுக்கூடு களை கொண்டு வந்து ஏலத்தில் பங்கேற்கின்றனர்.