தஞ்சை மாவட்டம் திருவையாறில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு மாட்டு வண்டி எல்கை பந்தயம் நடந்தது. இதில் ஏராளமான மாட்டு வண்டி உரிமையாளர்கள் தங்கள் மாடுகளுடன் கலந்து கொண்டு போட்டியில் சீறிப் பாய்ந்தனர். இதனை பொதுமக்கள் உற்சாகமாக கைத்தட்டி ஆரவாரம் செய்தனர்.