சிவகங்கை பேருந்து நிலையத்தில் சுமார் 65 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் இறந்த நிலையில் கிடப்பதாக தகவல் கிடைத்தது. இதையடுத்து, சிவகங்கை நகர் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சடலத்தை மீட்டனர். அந்த ஆணின் உடல் உடற்கூறு ஆய்விற்காக சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. முதல் கட்ட விசாரணையில், அவர் பேருந்து நிலையப் பகுதியில் யாசகம் செய்து வாழ்ந்து வந்தவர் என தெரியவந்துள்ளது.