சிவகங்கை மாவட்ட ஆட்சியரக வளாகப் பகுதியில் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெற்றது. இதில் 3,153 வழக்குகள் பரிசீலனைக்கு எடுக்கப்பட்டு, 1,495 வழக்குகள் சமரசமாக தீர்க்கப்பட்டன. இதன் மூலம் வழக்காடிகளுக்கு ரூ.8.91 கோடி நஷ்டஈடு கிடைத்தது. மேலும், வங்கி கடன் தொடர்பான 603 தாக்கல் செய்யப்படாத வழக்குகளில் 68 வழக்குகள் தீர்க்கப்பட்டு ரூ.97.33 லட்சம் வசூலானது