அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் வேலாயுத நகர் 05 குறுக்கு தெருவை சேர்ந்தவர் சையத்அலி. இவர் தனது வீட்டில் இருந்து கடைவீதிக்கு செல்வதற்காக தனது இருசக்கர வாகனத்தில் நேற்று வந்துள்ளார். அப்போது எதிரே வந்த பாப்பாங்குளம் கிராமத்தை சேர்ந்த செந்தில்குமார் என்பவர் ஒட்டி வந்த இருசக்கர வாகனம் சையத்அலி மீது மோதியதில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.