நீலகிரி மாவட்டம் கூடலூர், பந்தலூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த 2 நாட்களாக பெய்யும் மழையால் சிறு ஆறுகள், நீரோடைகளில் நீர்வரத்து அதிகரித்து குடியிருப்பு பகுதிகளுக்கு வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் மீண்டும் வானிலை ஆய்வு மையம் நீலகிரியில் தொடர்ந்து மழை பெய்யும் என அறிவித்துள்ளதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பாதுகாப்பு உபகரணங்களுடன் பேரிடர் மீட்பு குழுவினர் பந்தலூர் வட்டாட்சியர் அலுவலகத்திற்கு வருகை புரிந்தனர்