குடிமனை குடிமனை பட்டா அனுபவ நிலங்களுக்கு பட்டா வழங்கக்கோரி தஞ்சாவூர் மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு விவசாய தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அரசின் பல்வேறு வகையான புறம்போக்கு நிலங்களில் குடியிருப்பவர்களுக்கு வகைமாற்றம் செய்து சிறப்பு திட்டத்தை மாநில அரசு செயல்படுத்தி பட்டா வழங்க வேண்டும். நிலங்கள் இல்லாத விவசாயி தொழிலாளர்களுக்கு நிலப்பட்டா வழங்க வேண்டும் என்பது உட்பட பல கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.