மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் செயலாளர் மூத்த சிவில் நீதிபதியுமான ராஜேந்திர கண்ணன் ஏற்பாட்டில் மாவட்ட நீதிமன்றத்தில் லோக் அதாலக் எனப்படும் சமரச நீதிமன்ற நிகழ்வுகள் துவங்கின. மாவட்டம் முழுவதும் 12 தாலுகா நீதிமன்றங்களில் 20 அமர்வுகளில் லோக் அதாலக் நடைபெறுகிறது. புதுக்கோட்டையில் இந்நிகழ்வுகளை மாவட்ட முதன்மை நீதி அரசர் ஜே சந்திரன் துவக்கி வைத்து சிறப்புரையாற்றினார்.