அரியலூர் மாவட்ட மதிமுக சார்பிலான, மாவட்ட செயல்வீரர்கள் கூட்டம் அரியலூரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் இன்று நடைபெற்றது. இதில் கட்சியின் முன்னணி நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் கட்சியின் வளர்ச்சி பணிகள் குறித்தும், மதிமுக சார்பில் நடைபெற உள்ள மாநாட்டில், அரியலூர் மாவட்டத்தில் இருந்து திரளான கட்சி நிர்வாகிகள் பங்கேற்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.