சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த அரசு பள்ளி மாணவர்கள், உலகப் புகழ்பெற்ற ஐஐடி பட்டப்படிப்பிற்கு தேர்வாகிய பெருமையைப் பெற்றுள்ளனர். இந்த மாணவர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், மாவட்ட ஆட்சித்தலைவர் கா.பொற்கொடி, அவர்களை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றனர். இந்நிகழ்வில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்ததாவது: தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் பள்ளிக்கல்வி மற்றும் உயர்கல்வித் துறைகளில் பல்வேறு முன்னேற்ற திட்டங்களை செயல்படுத்தி மாணவர்களின் நலனை பாதுகாத்து வருகிறார்.