வேடசந்தூர் சாலை தெருவை சேர்ந்தவர் சம்சுதீன் அதிமுக முன்னாள் கவுன்சிலர். இவரது வீட்டிற்குள் நான்கடி நீளம் உள்ள கட்டுவிரியன் பாம்பு நுழைந்தது. அப்பொழுது வீட்டில் வாடகைக்கு குடியிருக்கும் பெண் ஒருவர் துணி துவைத்துக் கொண்டிருந்தார். பாம்பு வந்ததை பார்த்ததும் அலறி அடித்துக் கொண்டு கூச்சலிட்டவாறு ஓடினார். தகவல் அறிந்த வேடசந்தூர் தீயணைப்பு துறையினர் சுமார் 15 நிமிடம் தேடுதலுக்குப் பிறகு தண்ணீர் டேங்க் அடியில் பதுங்கி இருந்த கட்டு விரியன் பாம்பை கருவியின் மூலம் உயிருடன் பிடித்து சாக்குபையில் போட்டு கொண்டு சென்றனர்.