அரியலூர் மாவட்டம் செந்துறை ஊராட்சியில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் இன்று நடைபெற்றது. இதில் தமிழக போக்குவரத்து மற்றும் மின்சார துறை அமைச்சர் சிவசங்கர், மாவட்ட ஆட்சியர் ரத்தினசாமி கலந்து கொண்டனர். பின்னர் பல்வேறு துறைகளின் சார்பில் அமைக்கப்பட்டிருந்த அரங்குகளை பார்வையிட்டனர். மேலும் அடிப்படைத் தேவைகள் குறித்து மனு அளிக்க வந்த பொதுமக்களிடம் கலந்துரையாடினர்.