சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளிலிருந்து காரைக்குடி பகுதியில் உள்ள கல்லூரிகளுக்கு ஏராளமான மாணவ, மாணவிகள் படிப்பதற்காக தினசரி பயணம் செய்கின்றனர். கல்லூரி செல்லும் நேரங்களில் அதிகளவில் மாணவர்கள் பேருந்தில் ஏறி செல்லும் நிலை ஏற்படுவதால், மாணவர்கள் கடும் சிரமத்துக்கு உள்ளாகி வருகின்றனர்.இந்த நிலையில், மாணவர்களின் சிரமத்தை தீர்க்க கூடுதல் பேருந்துகளை இயக்க வேண்டும் என காமராசர் மக்கள் கட்சி மாவட்ட தலைவர் அருள் ஆனந்த் கோரிக்கை விடுத்துள்ளனர்