அரியலூர் மாவட்டம் மீன்சுருட்டி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட தேசிய நெடுஞ்சாலையில் விபத்து அபாய பகுதிகளாக 04 இடங்கள் கண்டறியப்பட்டுள்ளது. இந்நிலையில் அவ்விடங்களை மாவட்ட எஸ்பி விஸ்வேஷ் பா சாஸ்திரி நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். மேலும் அந்த இடங்களில் விபத்துக்கள் ஏற்படா வண்ணம் செய்ய வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து காவல்துறை அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கினார்.