வடமதுரை அருகே உள்ள புதுப்பட்டியை சேர்ந்தவர் மணி கூலிதொழிலாளி. இவர் தனது உறவினர் சரவணன் என்பவருடன் திண்டுக்கலில் உள்ள ஒரு கடையில் ஜன்னல், டைல்ஸ் உள்ளிட்ட பொருட்களை வாங்கிக் கொண்டு ஊருக்கு சென்று கொண்டிருந்தார். பைக்கை மணி ஓட்டிச் சென்றார். சரவணன் பின்னால் உட்கார்ந்து பொருட்களைப் பிடித்துக் கொண்டு வந்தார். திண்டுக்கல் திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் வேல்வார்கோட்டை பிரிவு அருகே சென்ற போது, பின்னால் போஜனம்பட்டியைச் சேர்ந்த அருண் என்பவர் ஓடி வந்த மோட்டார் சைக்கிள் அவர்கள் மீது பயங்கரமாக மோதியது.