சிவகங்கை அருகே கொல்லங்குடி ஸ்ரீ முத்துமாரியம்மன் திருக்கோவில் முளைப்பாரி உற்சவ விழா மற்றும் ஸ்ரீ சைவ முனிஸ்வரர் கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு 62 ஆம் ஆண்டு இரட்டை மாட்டுவண்டி எல்கை பந்தயம் நேற்று முன்தினம் மாலை நடைபெற்றது பூஞ்சிட்டு பிரிவில் மொத்தம் 16 மாட்டு வண்டிகள் கலந்து கொண்டன. சிவகங்கை காளையர்கோவில் சாலையில் நடைபெற்ற மாட்டு வண்டி பந்தயத்தில் சாலை ஓரத்தில் நடந்து சென்ற பெண்னை மாட்டு வண்டியில் பூட்டப்பட்ட காளை முட்டி தூக்கி வீசிய காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது.