தஞ்சாவூர் மாவட்டம் கரந்தையை சேர்ந்தவர் ராஜசேகர். வயது 34. இவர் அரியலூர் மாவட்டத்தை சேர்ந்த 18 வயதிற்குட்பட்ட சிறுமியை கடந்து 2021 ஆம் ஆண்டு பாலியல் வன்புனர்வு செய்துள்ளார். இதனையடுத்து அவர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார். மேலும் இது குறித்த வழக்கு அரியலூர் மகளிர் நீதிமன்றத்தில் நடந்து வந்த நிலையில் நேற்று இந்த வழக்கை விசாரித்த நீதிபதி மணிமேகலை, குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.