விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு தமிழகமெங்கும் மக்கள் உற்சாகமாக கொண்டாடி வரும் நிலையில் , இன்று சிவகங்கை மாவட்டம் மானாமதுரை காவல் நிலைய சரகத்திற்குட்பட்ட பகுதிகளான சாஸ்தா நகர், அண்ணாமலை நகர், கன்னார் தெரு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் விநாயகர் சிலைகள் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு, ஆட்டம், பாட்டத்துடன் குளங்களில் உற்சாகமாக கரைக்கப்பட்டன. இந்த நிகழ்வுகளில் பாஜக, இந்துமுன்னணி உள்ளிட்ட ஏராளமான பங்கேற்றனர். மொத்தமாக 54 விநாயகர் சிலைகள் கரைக்கப்பட்டன