நீலகிரி மாவட்டம் ஓவேலி அருகே காட்டு யானை தாக்கி ஒருவர் உயிரிழந்தார். இதனை தொடர்ந்து உதகை - கூடலூர் சாலையில் மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். தொடர்ந்து மறியலில் ஈடுபட்டவர்கள் கைது செய்யப்பட்டனர். இந்நிலையில் மக்கள் குடியிருப்பு பகுதிக்குள் வனவிலங்குகள் வராமல் தடுக்க வேண்டும் என 3 கோரிக்கைகளை வலியுறுத்தி வருகிற செப். 11 காலை 6 மணி முதல் மறுநாள் காலை 6 மணி வரை 24 மணி நேர வேலை நிறுத்தம் மற்றும் கடையடைப்பு போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது