தமிழ்நாடு முதலமைச்சர் அறிவுறுத்தலின்படி இளைஞர்களுக்கிடையே புத்தாக்க மற்றும் தொழில் முனைவோருக்கான சிந்தனைகளை ஊக்குவிக்க நிமிர்ந்து நில் என்ற தமிழ்நாடு இளைஞர் புத்தாக்க மற்றும் தொழில் முனைவோர் மேம்பாட்டு திட்டமானது தொடங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் உயர்கல்வி நிறுவனங்களுக்கான நிமிர்ந்து நில் திட்டம் சார்ந்த பயிற்சியினை மாவட்ட ஆட்சியரகத்தில் மாவட்ட ஆட்சியர் ரத்தினசாமி இன்று தொடங்கி வைத்தார்.