எரியோட்டில் இந்து முன்னணியின் சார்பில் விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் நடைபெற்றது. ஊர்வலம் நகரில் அனைத்து பகுதிகளுக்கும் சென்று வந்தது. வேடசந்தூர் முன்னாள் எம்எல்ஏக்கள் டாக்டர் வி.பி.பி.பரமசிவம், மற்றும் தென்னம்பட்டி பழனிச்சாமி ஆகியோர் ஊர்வலத்தை கொடியசைத்து துவக்கி வைத்தனர். ஊர்வலத்திற்கு இந்து முன்னணி மாவட்டசெயலாளர் மாரிமுத்து தலைமை வகித்தார். இந்து முன்னணி ரமேஷ்குமார் முன்னிலை வகித்தார். வெள்ளாளர் முன்னேற்ற சங்க மாநில இளைஞர் அணி செயலாளர் பந்தல்ராஜா சிறப்புரையாற்றினார்.