தர்மபுரிமாவட்டம், மாரண்டஅள்ளி அடுத்த பானையன் கொட்டாய் கிராமத்தை சேர்ந்த முதியவர் பூங்காவனம் (60) இவருக்கும், இவரது தம்பி கோவிந்தராஜி (52) என்பவருக்கும் நிலத்தகராறில் முன்விரோதம் இருந்து வந்தது, இந்நிலையில் கடந்த 19ம் தேதி முதியவரின் பேத்தி சுபத்ரா வீட்டின் அருகே செல்போனில் படம் பிடித்து கொண்டிருந்தார்.அப்போது அங்கு வந்த கோவிந்தராஜ் மற்றும் உஷா(45) ஆகியோர் சுபத்ரா வீடியோ எடுக்க கூடாது என தகராறில் ஈடுபட்டவர்கள் கல்லால் சுபத்ராவை தாக்கி உள்ளனர்.