வேடசந்தூர் அருகே உள்ள வெள்ளைய கவுண்டனூரில் தனிநபர் ஒருவர் தொடர்ந்த வழக்கின் காரணமாக ஆக்கிரமிப்பு அகற்றப்படும் என 32 குடும்பத்தினருக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டது. முறையாக ஆறு மாதத்திற்கு முன்பு கோர்ட் வழங்கிய நோட்டீஸ் பொதுமக்களுக்கு கிடைக்கவில்லை என கூறப்படுகிறது. இந்நிலையில் திடீரென ஆக்கிரமிப்பை அகற்ற நோட்டீஸ் வந்ததால் பொதுமக்கள் தங்களுக்கு வேறு வீடு இல்லையே எங்கு தங்குவது என்று அச்சமடைந்து உள்ளனர்.