திருச்செந்தூர் முருகன் கோவில் முன்புள்ள கடல் அவ்வப்போது உள்வாங்கியும், சீற்றத்துடனும் காணப்படுவது வழக்கம். அதுமட்டுமல்லாமல் அமாவாசை பௌர்ணமி நாட்களில் உள்வாங்கியும் காணப்படும். இந்த நிலையில் இன்று விடுமுறை தினம் என்பதால் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் கோவில் முன்புள்ள கடலில் புனித நீராடி மகிழ்ந்து வருகின்றனர்.