நீலகிரி மாவட்டம் கூடலூரை அடுத்துள்ள மரப்பாலம் பகுதியில் பல மாதங்களாக குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டு வந்தும் இதுவரை எந்த வித நடவடிக்கையும் எடுக்காததால் விரக்தி அடைந்த மக்கள் இன்று காலை முதல் குடத்துடன் சாலையில் அமர்ந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ள நிலையில் பல மணி நேரமாக அவ்வழியாக போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளது