தஞ்சாவூர் மாவட்டம் ஆடுதுறை பேரூராட்சி தலைவர் ம.க.ஸ்டாலினை கொலை செய்ய முயன்ற வழக்கில் ஏற்கனவே இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில் இந்த சம்பவத்தில் உளவு பார்த்து கூறியதாக திருவிடைமருதூரை சேர்ந்த சஞ்சய் மற்றும் சேரன் ஆகிய இருவரை போலீசார் நேற்று இரவு கைது செய்து சிறையில் அடைத்தனர்.