சிவகங்கை வல்லனி அன்னை தெரசா ஆலய நிர்வாகமும், அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை ரத்த வங்கியும் இணைந்து வெள்ளிக்கிழமை அன்னை தெரசா நினைவுநாளை முன்னிட்டு ரத்ததான முகாம் நடத்தியது. ஆலய பங்குத்தந்தை ஏ. பிலிப் சேவியர் தலைமையில் நடைபெற்ற முகாமில், சிவகங்கை மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் லா. பிரான்சிஸ் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று ரத்ததானம் செய்து முகாமை தொடங்கினார்.