அரியலூர் மாவட்டம் சாத்தமங்கலம் ஊராட்சியில் உள்ள நல்ல தண்ணீர் குளத்தில் அரியலூர் மாவட்ட தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறையின் சார்பில் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பான ஒத்திகை பயிற்சி இன்று நடைபெற்றது. இதில் மாவட்ட ஆட்சியர் ரத்தினசாமி கலந்து கொண்டார். அப்போது வடகிழக்கு பருவமழை காலங்களில் நீர்நிலைகளில் உயிர் மீட்பு பணிகள் மேற்கொள்வது குறித்தும், விழிப்புணர்வு ஏற்படுத்தபட்டது.