தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு அண்ணா ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் தமிழக ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் பணி நிறைவு பெற்ற ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா பாலக்கோடு வட்டார தலைவர் கோவிந்தராஜ் அவர்களின் தலைமையில் நடந்தது.இதில் தமிழக ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணி . மாநில பொதுசெயலாளர் தாஸ் அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, பணி நிறைவு பெற்ற ஆசிரியர்களின் சேவைகளை பாராட்டி நினைவு பரிசினை வழங்கினார்.