விநாயகர் சதுர்த்தி விழா இன்று அனைவராலும் கொண்டாடபட்டது. இந்நிலையில் அரியலூர் நகரில் அரண்மனை தெருவில் அமைந்துள்ள சக்தி விநாயகர் ஆலயத்தில் காவல்துறையின் அனுமதி பெற்று புதிய விநாயகர் சிலை அமைக்கபட்டுள்ளது. இதனையொட்டி சிறப்பு யாகம் வார்க்கபட்டு, புதிதாக அமைக்கப்பட்ட விநாயகர் சிலைக்கு மகா தீபாரதணை நடைப்பெற்றது. மேலும் மாவட்டம் முழுவதும் 426 விநாயகர் சிலைகள் வைக்க அனுமதி வழங்கபட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.