அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே மீன்சுருட்டி- கல்லாத்தூர் சாலையை மாநில நெடுஞ்சாலையாக மாற்றி தரம் உயர்த்த வேண்டும் என பல்வேறு கட்ட போராட்டங்கள் நடைபெற்று வந்தது. இந்நிலையில் நடைப்பயணம் மற்றும் கண்டன ஆர்ப்பாட்டம், மே 17ஆம் தேதி அன்று நடைபெற்றது. இதில் வெத்தியார்வெட்டு கிராமத்தில் இருந்து புறப்பட்டு மீன்சுருட்டி கடைவீதி வரை நடை பயணமும், பின்னர் மீன்சுருட்டி கடைவீதியில் கண்டன ஆர்ப்பாட்டமும் நடைபெற்றது.