சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே புதுவயல் ராமநாத செட்டியார் தெருவைச் சேர்ந்த ராசு (80). அவர் வீட்டிலிருந்து வெளியே சென்றபின், மீண்டும் வீடு திரும்பவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. அக்கம்பக்கத்தில் தேடியும் அவர் எங்கு சென்றார் என்ற தகவல் கிடைக்காத நிலையில், அவரது மனைவி அழகம்மை சாக்கோட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.