வேடசந்தூர் தாலுகா வடமதுரை ஒன்றியம் தென்னம்பட்டியில் இருந்து பாகானத்தம் செல்லும் ரோட்டில் கல்குவாரி ஒன்று உள்ளது. இந்த குவாரி தண்ணீரில் 50க்கும் மேற்பட்ட பிராய்லர் கோழிகள் செத்து மிதந்து கொண்டு உள்ளது. இதனால் அந்த வழியாக செல்லும் பொழுது கடும் துர்நாற்றம் வீசுவதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.