திருக்கோவிலுார் அடுத்த தென் பெண்ணையாற்று, பழைய தரைப்பாலம் பகுதியில் ஏராளமான கற்சிலைகள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. தனிநபர்கள் வீடு கட்டுவதிற்கு தரையை தோண்டியபோது சிலை கிடைத்திருக்கலாம். இது வெளியே தெரிந்தால் வீடு கட்டும் இடத்தில் பிரச்னை வரும் என கருதி சிலைகளை ஆற்றில் வைத்துவிட்டு சென்றிருக்கலாம் என தகவல் பரவிய நிலையில் வருவாய்துறை அலுவலர்கள் விசாரணை நடத்துகின்றனர்