வேடசந்தூர் தாலுகா எரியோடு பேரூராட்சி பண்ணைபட்டியில் ஒரு கோடியே 43 லட்சம் மதிப்பீட்டில் திருமண மண்டபம் கட்டுவதற்கான பூமி பூஜை மற்றும் அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாக உணவு மற்றும் உணவுப் பொருள்கள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி, வேடசந்தூர் எம்எல்ஏ காந்தி ராஜன் ஆகியோர் கலந்து கொண்டு பூமி பூஜை போட்டு அடிக்கல் நாட்டில் கட்டிடப் பணியை தொடங்கி வைத்தனர். இதில் ஏராளமான திமுக நிர்வாகிகள் அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.