முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைத்த நகர்ப்புற அரசு உதவிபெறும் பள்ளிகளில் காலை உணவு திட்ட விரிவாக்கம் மாநிலம் முழுவதும் நடைபெற்றது. சுமார் 3 லட்சம் மாணவர்கள் பயன்பெறும் இந்தத் திட்டத்தின் ஒரு பகுதியாக, சிவகங்கை மன்னர் நடுநிலைப்பள்ளியில், மாவட்ட ஆட்சியர் பொற்கொடி தலைமையில், கூட்டுறவுத்துறை அமைச்சர் கே.ஆர். பெரியகருப்பன் கலந்து கொண்டு திட்டத்தை துவக்கினார்.