அரியலூர் மாவட்டம் கோட்டைக்காடு கிராமத்தை சேர்ந்த வேல்விழி மற்றும் கனிமொழி ஆகிய இருவரும் பெண்ணாடம் சென்று மீண்டும் கோட்டைக்காடு நோக்கி தனது இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்தனர். அப்போது மதுபோதையில் மர்ம நபர் ஒருவர் பின்தொடர்ந்து வந்தபோது கோட்டைக்காடு சாலையில் வேல்விழி மற்றும் கனிமொழி ஆகிய இருவரிடமும் தகராறில் ஈடுபட்டு வேல்விழி கழுத்தில் அணிந்திருந்த 05 பவுன் தங்கச் செயினை பறித்து தப்பி ஓட்டம்.