தூத்துக்குடி திரேஸ்புரம் நாட்டு படகு மீன்பிடி துறைமுகத்தில் இருந்து ஆழ்கடலுக்கு மீன்பிடிக்க சென்ற ஏராளமான நாட்டுப் படகுகள் இன்று கரை திரும்பின. இன்று சனிக்கிழமை என்பதால் மீன்களை வாங்க பொதுமக்களின் கூட்டம் மீன்பிடி துறைமுகத்தில் அலைமோதியது. ஆனால் கடல் பகுதியில் வீசிய பலத்த காற்று காரணமாக மீன்கள் சரிவர கிடைக்காததால் மீன்களின் வரத்து குறைவாக காணப்பட்டது.