விநாயகர் சதுர்த்தி விழா இன்று நாடு முழுவதும் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதைத்தொடர்ந்து விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு தூத்துக்குடி பாகம் பிரியாள் உடனுறை சங்கர ராமேஸ்வரர் ஆலயத்தில் குழந்தைகள் மற்றும் பள்ளி மாணவ மாணவியருக்கான விநாயகர் உருவப்படத்திற்கு வண்ணம் தீட்டும் போட்டி மற்றும் விநாயகர் உருவப்படம் வரையும் போட்டி ஆகியவை நடத்தப்பட்டது.