தூத்துக்குடி முத்தையாபுரம் மகாலட்சுமி நகர் பகுதியை சேர்ந்தவர் சுப்புலட்சுமி லயன்ஸ் கிளப்பில் நிர்வாகி ஆக உள்ளதாக கூறி முத்தையாபுரம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் தன்னை அறிமுகப்படுத்தியுள்ளார். தொடர்ந்து பல்வேறு பகுதிகளில் பெண்கள் உள்ளிட்ட பலரை ஏமாற்றி சுமார் 80 லட்சம் பணம் மற்றும் 300 பவுன் நகை மோசடி செய்துள்ளார். அவரிடமிருந்து நகை பணத்தை மீட்டு தர மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பாதிக்கப்பட்ட பெண்கள் கோரிக்கை விடுத்தனர்.