பள்ளிகளில் காலாண்டு தேர்வு முடிவடைந்து விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதனால் தங்கள் குழந்தைகளுடன் பெற்றோர்கள் குடும்பம் குடும்பமாக ரயில்களில் வெளியூருக்கு பயணம் செய்ய தொடங்கியுள்ளனர். யாழ் வெளி மாவட்டங்களுக்கு செல்லும் பயணிகள் இடையில் அதிகளவு மக்கள் கூட்டம் காணப்படுகிறது. அந்த வகையில் இன்று தஞ்சாவூருக்கு வந்த சோழன் ரயிலில் இடம் பிடிக்க பொதுமக்கள் அலைபாய்ந்தனர்.