தமிழக முழுவதும் அரசு உதவி பெறும் பள்ளிக்கு காலை உணவு திட்டம் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. இந்த திட்டத்தை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்னையில் துவங்கி வைத்தார். தூத்துக்குடி ஹோலி கிராஸ் பள்ளியில் வீடியோ கான்பரன்ஸ் மூலம் நடைபெற்ற நிகழ்ச்சியில் தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி கலந்து கொண்டு குழந்தைகளுக்கு காலை உணவு வழங்கி குழந்தைகளுடன் அமர்ந்து உணவு அருந்தினார்.