ஒட்டன்சத்திரத்தில் திண்டுக்கல் செல்லும் சாலையில் அரசு போக்குவரத்து பணிமனை உள்ளது. இங்கு ஆட்டோ ஒன்று நின்றிருந்தது. ஆட்டோவில் ஆட்டோ டிரைவர் அமர்ந்து இருந்தார். அப்பொழுது எதிர்பாராத விதமாக அருகில் இருந்த மரம் ஒன்று முறிந்து ஆட்டோவின் மேல் விழுந்தது. இதில் ஆட்டோ நசுங்கியது. ஆட்டோவில் அமர்ந்திருந்த டிரைவர் படுகாயம் அடைந்தார். இதனைப் பார்த்த அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் ஒட்டன்சத்திரம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். மரம் முறிந்து விழுந்து ஆட்டோ டிரைவர் படுகாயம் அடைந்த சம்பவத்தால் பரபரப்பு.