வேடசந்தூரில் வருகின்ற 27 ஆம் தேதி விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு ஒன்றிய இந்து முன்னணியின் சார்பில் விநாயகர் சிலைகள் 60 இடங்களில் பிரதிஷ்டை செய்யப்படுகின்றது. இதற்கென சிலைகள் வேடசந்தூர் ஆர் ஹச் காலனியில் உள்ள ஐயப்பன் கோவிலில் வந்து இறங்கியது. 27 ஆம் தேதி பிரதிஷ்டை செய்யப்பட்டு 31ஆம் தேதி மாலை வேடசந்தூரின் முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலம் செல்ல உள்ளது. ஆத்துமேட்டில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் முக்கிய அரசியல் மற்றும் ஜாதி கட்சி பிரமுகர்கள் கலந்து கொள்கின்றனர்.