சிவகங்கை மாவட்டம் கீழடியில் வையை இயற்கை வேளாண்மை குழுவின் சார்பில் 5ம் ஆண்டு விதைத் திருவிழா இன்று நடைபெற்றது.விழாவிற்கு ஊராட்சி மன்ற தலைவர் வெங்கடசுப்ரமணியன் தலைமை வகித்தார். திருப்புவனத்தை அடுத்த கணக்கன்குடியைச் சேர்ந்த கருணாகர சேதுபதி பாரம்பரிய நெல் ரகங்களை மீட்டெடுத்து வருபவராவார். அவர் 2023ஆம் ஆண்டு ராமநாதபுரம் மாவட்ட நெல்லான தில்லைநாயகம் ரகத்தை மீண்டும் அறிமுகப்படுத்தினார்.