சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே வைகை ஆற்றங்கரையில் வாக்காளர் அட்டைகள் கிடந்ததாக புகார் எழுந்துள்ளது. அங்காடிமங்கலம் செல்லும் வழியில் அட்டைகள் சிதறிக் கிடந்ததாக கூறப்படுகின்றது. இதில் பாப்பாகுடி, வெங்கட்டி உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த வாக்காளர் அட்டைகள் இருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.இச்சம்பவம் தொடர்பாக வருவாய்துறை அதிகாரிகள் மற்றும் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.