புதுக்கோட்டை மாவட்டம் ஆவரங்குடி பட்டியில் நடைபெற்று வரும் மாநில அளவிலான துப்பாக்கி சூடு போட்டியில் பிஜேபியின் முன்னாள் தமிழக தலைவர் அண்ணாமலை இடம் இருந்து பதக்கத்தை வாங்க மறுத்த தமிழக அமைச்சர் டி ஆர் பி ராஜாவின் மகன் சூரிய ராஜபாலு செயலால் பரபரப்பு ஏற்பட்டது. விளையாட்டு வீரர்கள் திறமையை மட்டுமே பார்க்க வேண்டும் எனவும் அரசியலை விளையாட்டில் புகுத்த கூடாது என விமர்சனம் எழுந்துள்ளது.