தருமபுரி மாவட்டம் சேசம்பட்டி பகுதியை சேர்ந்தவர் முருகன் (வயது 55). இவர் தருமபுரி அரசு கலைக்கல்லூரியில் பேராசிரியராக பணிபுரிந்து வருகிறார். இவர் போட்டி தேர்வுகளுக்கு ஆலோசனைகள் வழங்கி வந்தார். இவரிடம் கிருஷ்ணகிரி மாவட்டம் பட்டனூர் பகுதியை சேர்ந்த ராஜீவ்காந்தி (37) என்பவரின் மனைவி வினோதா (32) போட்டி தேர்வுக்கு படித்து வந்தார். அப்போது ராஜீவ்காந்தி தனது மனைவிக்கு புத்தகங்கள் வாங்கவும், ஆலோசனைகள் பெறவும் முருகனை அணுகியுள்ளார்.