தமிழ்நாடு சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஓய்வூதியர் சங்கம் சார்பில் மக்கள் சந்திப்பு பிரச்சார இயக்கம் நடைபெற்றது. இதில் திமுகவின் தேர்தல் வாக்குறுதியான முறையான பென்ஷன் வழங்கப்படும் என்ற வாக்குறுதி என்ன ஆச்சு, மோப்பநாய் பராமரிப்பிற்கு 9 ஆயிரம் ரூபாய் வழங்கும் அரசு 40 ஆண்டு காலம் பணியாற்றி ஓய்வு பெற்ற மூத்த குடிமக்கள் மீது நாய்களுக்கு காட்டும் அக்கறையை கூட காட்டவில்லையே என்பது உட்பட பல்வேறு கோஷங்கள் எழுப்பினர். பின்னர் எங்களுக்கு நியாயம் கிடைத்திட பொதுமக்கள் ஆதரவு தர வேண்டும் என அனைத்து பொது மக்களுக்கும் துண்டு பிரசுரங்கள் வழங்கினர்.